135 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ராஜபாளையத்தில் 135 கிலோ பிளாஸ்டிக்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-10-08 18:48 GMT

ராஜபாளையம், 

ராஜபாளையம் நகராட்சி பகுதியில் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா, சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் நகரின் முக்கிய பகுதிகளில் செயல்படும் வணிக நிறுவனங்கள், முட்டை கடைகள் உள்ளிட்ட இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 135 கிலோ பறிமுதல் செய்தனர். அத்துடன் கடை உரிமையாளர்களிடம் இருந்து ரூ. 9,400 அபராதம் வசூல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்