134 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்கள்

குடியரசு தின விழாவில் கலெக்டர் மேகநாதரெட்டி 134 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களையும் 237 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.

Update: 2023-01-26 19:56 GMT


குடியரசு தின விழாவில் கலெக்டர் மேகநாதரெட்டி 134 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களையும் 237 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.

குடியரசு தின விழா

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் குடியரசு தினவிழா நடைபெற்றது. கலெக்டர் மேகநாத ரெட்டி நேற்று காலை 8.15 மணிக்கு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். போலீஸ் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து விருதுநகர் சிறப்பு தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு பாண்டி உள்பட 134 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை வழங்கினார்.

மேலும் சிறப்பாக பணியாற்றியதற்காக மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி, விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் முருகேசன், வெங்கடேஸ்வரன், ராஜேஷ், விருதுநகர் நகரசபை கமிஷனர் ஸ்டான்லி பாபு, அருப்புக்கோட்டை தாசில்தார் அறிவழகன் உள்ளிட்ட 237 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

நினைவுத்தூண்

தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக விழாவிற்கு வந்த கலெக்டர் மேகநாதரெட்டியை, மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார், போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றி வேந்தன் ஆகியோர் வரவேற்றனர்.

விருதுநகர் தேசபந்து திடலில் உள்ள தியாகிகள் நினைவுத்தூணில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் வசந்தி மான்ராஜ், விருதுநகர் யூனியன் அலுவலகத்தில் தலைவர் சுமதி ராஜசேகர் ஆகியோர் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சீனிவாசன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் நகரசபை அலுவலகத்தில் தலைவர் மாதவன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் தனலட்சுமி, கமிஷனர் ஸ்டான்லி பாபு, கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மரியாதை

விருதுநகர் முத்தமிழ் காலனியில் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. சங்கத்தலைவர் முன்னாள் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் செல்வராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

விருதுநகர் ஒய்ஸ்மென் சங்கத்தின் சார்பில் சங்கத்தலைவர் வாழவந்தான் தலைமையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. சங்கத்தின் சார்பில் சங்கரலிங்க நாடார் உயர்நிலைப்பள்ளி வளாகத்திலும் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்