மின்வாரிய உதவி பொறியாளர் பணிக்கான தேர்வை 1,310 பேர் எழுதினர்

காரைக்குடியில் 5 மையங்களில் நடந்த மின்வாரிய உதவி பொறியாளர் பணிக்கான தேர்வை 1,310 பேர் எழுதினர்.

Update: 2022-07-02 19:38 GMT

காரைக்குடி, -

காரைக்குடியில் 5 மையங்களில் நடந்த மின்வாரிய உதவி பொறியாளர் பணிக்கான தேர்வை 1,310 பேர் எழுதினர்.

உதவி செயற்பொறியாளர் பணி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 626 உதவி பொறியாளர் தேர்வு நேற்று தமிழகத்தில் சென்னை, புதுக்கோட்டை, கோவை, ராமநாதபுரம், சிதம்பரம், சேலம், காஞ்சீபுரம், காரைக்குடி, நாகர்கோவில், தஞ்சாவூர், மதுரை, திருச்சி, ஊட்டி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 15 இடங்களில் நடைபெற்றது. இந்த பணியிடத்திற்கு தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 414 பேர் தேர்வு எழுதினர்.

இந்த தேர்வு காரைக்குடியில் வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மகரிஷி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி, அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, எஸ்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 இடங்களில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் இந்த தேர்விற்கு மொத்தம் 1,612பேர் விண்ணப்பத்திருந்தனர்.

302 பேர் வரவில்லை

ஆனால் நேற்று இந்த தேர்வை 1,310 பேர் தேர்வு எழுதினர். 302 பேர் தேர்வு எழுத வரவில்லை. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மதியம் 1 மணி வரை நடைபெற்றது. காரைக்குடியில் நடைபெற்ற இந்த தேர்வு மையத்தை கோட்டாட்சியர் மங்களநாதன் (பொறுப்பு) தலைமையில் காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், டாக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

மேலும் தேர்வு எழுத வந்த நபர்களுக்கு தேர்வு மையத்தில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. காரைக்குடி பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்வை ஆண்கள் தேர்வர்கள் மட்டுமே அதிகளவில் தேர்வு எழுதினர். மேலும் காரைக்குடி பகுதியில் நேற்று மின்சார பழுது பார்க்கும் பணிக்காக மின்வாரியம் சார்பில் மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில் நேற்று இந்த தேர்விற்காக அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கத

Tags:    

மேலும் செய்திகள்