நெல்லைக்கு ரெயிலில் 1,300 டன் ரேஷன் அரிசி வருகை
நெல்லைக்கு ரெயிலில் 1,300 டன் ரேஷன் அரிசி வந்தது.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு கடந்த 3 நாட்களாக ரேஷன் அரிசி, நெல் மூட்டைகள் கொண்டு வரப்படுகிறது. நேற்று முன்தினம் மேற்கு வங்காளத்தில் இருந்து 2,600 டன் ரேஷன் அரிசியும், ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 1,300 டன் அரிசியும் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் நேற்று தஞ்சாவூரில் இருந்து 21 சரக்கு ரெயில் பெட்டிகளில் 1,300 டன் நெல் மூட்டைகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன. அந்த ரெயில் நேற்று காலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. அதில் இருந்து மூட்டைகளை தொழிலாளர்கள் லாரியில் ஏற்றி உணவு பாதுகாப்பு குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.