உரிய ஆவணங்கள் இல்லாத 13 வாகனங்களுக்கு அபராதம்
வந்தவாசியில் உரிய ஆவணங்கள் இல்லாத 13 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வந்தவாசி
செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி வந்தவாசியில் வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை மடக்கி சோதனை செய்தார். அதில் உரிய ஆவணங்கள் இல்லாத 13 வாகனங்களுக்கு ரூ.2 லட்சத்து 41 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் முற்றிலும் ஆவணங்கள் இல்லாத 2 வாகனங்களை அவர் பறிமுதல் செய்து வந்தவாசி தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.