கேரளாவுக்கு அதிக கனிமவளங்களை ஏற்றி சென்ற 13 லாரிகளுக்கு அபராதம்

புளியரை சோதனை சாவடியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கேரளாவுக்கு அதிக கனிமவளங்களை ஏற்றி சென்ற 13 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-03-30 18:45 GMT

செங்கோட்டை:

தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில் லாரிகளில் அதிகளவு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் தலைமையில் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர். அவ்வாறு லாரிகளில் அதிகளவில் கனிமங்கள் கொண்டு செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழக-கேரள எல்லை பகுதியில் புளியரை சோதனை சாவடியில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் தீபன்குமார் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கேரளாவுக்கு சென்ற லாரிகளை சோதனை செய்தபோது, 13 லாரிகளில் அளவுக்கு அதிகமாக கனிமவளங்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரிகளுக்கு ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்