வக்கீலுக்கு ரூ.13 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்

வக்கீலுக்கு ரூ.13 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-02-28 20:33 GMT

நெல்லை மேகலிங்கபுரத்தைச் சேர்ந்த வக்கீல் கிருஷ்ணன் என்பவர் தனது நான்கு சக்கர வாகனத்திற்கு புகை சான்று பெற தனியார் நிறுவனத்திடம் ரூ.200 செலுத்தி ரசீதையும் பெற்றுள்ளார். ஆனால் புகை சான்று வழங்குவதற்கு ரூ.50 மட்டுமே அரசு நிர்ணயித்த கட்டணம் வசூல் செய்ய வேண்டும். ஆனால் கூடுதலாக ரூ.150 வசூல் செய்தது முறையற்ற வாணிபம் என தனியார் நிறுவன உரிமையாளரிடமும், வட்டார போக்குவரத்து அலுவலரிடமும் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கூடுதலாக வசூலித்த தொகையை திருப்பி தருமாறு கேட்டு உள்ளார். ஆனால் திருப்பி கொடுக்க மறுத்துவிட்டதால் கிருஷ்ணன் வக்கீல் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை நீதிபதி கிளாடஸ் டோன்பிளஸ்ட் தாகூர், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் விசாரித்து, கிருஷ்ணனிடம் கூடுதலாக வசூல் செய்த ரூ.150 முறையற்ற வாணிபம் ஆகும். அதனால் கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூ.10 ஆயிரமும், வழக்குச் செலவு ரூ.3 ஆயிரமும் சேர்த்து மொத்தம் 13 ஆயிரம் ரூபாயை தனியார் நிறுவனமும், வட்டார போக்குவரத்து அலுவலரும் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்