சட்டவிரோதமாக மது விற்ற 13 பேர் கைது
குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 161 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 161 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுவிற்பனை
திருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் சட்டவிரோதமாக ஆங்காங்கே சிலர் மது விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
அதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் ஆகிய 4 சப் டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
13 பேர் கைது
அப்போது அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக நாகர்கோவில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் 5 பகுதிகளில் 5 பேரையும், தக்கலை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார்5 பகுதிகளில் 5 பேரையும், ராஜாக்கமங்கலம், பூதப்பாண்டி, இரணியல் போலீசார் தலா ஒருவர் என 13 பேரை கைது செய்தனர். இதுதொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.மேலும் அவர்களிடம் இருந்து 161 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.