வெறிநாய் கடித்து கர்ப்பிணி உள்பட 13 பேர் காயம்

நாச்சியார்கோவிலில் வெறிநாய் கடித்து கர்ப்பிணி உள்பட 13 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-10-01 21:42 GMT

திருவிடைமருதூர்:

சுற்றித்திரியும் நாய்கள்

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாச்சியார் கோவில் பகுதிகளில் கறிக்கடைகளில் வெட்டப்படும் கழிவுகளை ஆங்காங்கே கொட்டுவதால் நாய்கள் அதை தின்றுவிட்டு சுற்றித்திரிகின்றன.

13 பேர் காயம்

இந்த நிலையில் நேற்று நாச்சியார்கோவில் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, பாரதி நகர், வேப்பங்குளம் தெரு, முஸ்லிம் தெரு ஆகிய தெருக்களில் சுற்றி திரிந்த வெறிநாய் ஒன்று சாலையில் செல்பவர்களை விரட்டி, விரட்டி கடித்ததில் 13 பேர் காயம் அடைந்தனர்

நாய் கடித்ததில் காயம் அடைந்த அகல்யா, தரன், சுகன் ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்ப்பிணி

இதில் அகல்யா என்ற பெண் கர்ப்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்