சாலை வரி செலுத்தாத 13 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

சாலை வரி செலுத்தாத 13 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-10-20 19:16 GMT

ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களையொட்டி ஏராளமானவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் ஆம்னி பஸ்களிலும் ஏராளமானவர்கள் பயணிப்பார்கள். ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், சாலை வரி செலுத்தாமல் இயக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. அதன்பேரில் போக்குவரத்து துணை ஆணையர் நெல்லையப்பன் மேற்பார்வையில் வேலூர் போக்குவரத்து சரகத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோதனை செய்தனர்.

கடந்த 18-ந் தேதி முதல் நேற்று வரை நடத்தப்பட்ட சோதனையில் சாலை வரி செலுத்தாமல் இயங்கிய 13 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை வருகிற 25-ந் தேதி வரை நடத்தப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்