தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி: குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Update: 2022-10-20 18:54 GMT

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-5-2018-ந் தேதி பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பரிதாபமாக இறநதனர். இதுகுறித்து விசாரித்து வந்த, ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம், தனது பரிந்துரைகளை தமிழக அரசிடம் அளித்தது. இதுகுறித்து பெரம்பலூர் மக்கள் கூறுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. உயிர் என்பது விலை மதிக்க முடியாதது. இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு கூட உரிமை இல்லாமல், போராடியவர்களை பயங்கரவாதிகள் போல் பாவித்து, அவர்களை குருவியை சுட்டுக்கொல்வது போல் 13 அப்பாவி மக்களை சுட்டு கொன்றது கவலையளிக்கிறது. அப்போது அரசு முனைப்புடன் செயல்பட்டிருந்தால் 13 பேரின் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்