13-ந்தேதி மின் நிறுத்தம்
திருநாகேஸ்வரம், பட்டீஸ்வரம் பகுதிகளில் 13-ந்தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கும்பகோணம்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கும்பகோணம் நகர உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- சாக்கோட்டை துணைமின் நிலையத்தில் பாராமரிப்பு பணிகள் வருகிற 13-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதைெயாட்டி இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான கும்பகோணம் உமா மகேஸ்வரபுரம், கோசி மணி நகர், தாராசுரம் எலுமிச்சங்காய் பாளையம் அண்ணல் அக்ரஹாரம், திப்பிராஜபுரம், அரியத்திடல், சிவபுரம், உடையாளூர், சுந்தர பெருமாள் கோவில், நாச்சியார் கோவில், திருநாகேஸ்வரம் முருக்கங்குடி, அய்யாவாடி, புதூர், அவனியாபுரம், திருநீலக்குடி, பட்டீஸ்வரம், வலங்கைமான், ஆலங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அன்று 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.