காங்கயம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 80ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சூதாட்டம்
காங்கயத்தை அடுத்த கொடுவாய் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக ஊதியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்தில் சூதாட்டம் நடைபெறுவது தெரியவந்தது.
இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட திருப்பூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 50), லோகநாதன் (61), ஆறுமுகம் (50), வாசுதேவன் (63), பிரபாகரன் (41), சரவணகுமார் (38), ஆறுமுகம் (50), ராமச்சந்திரன் (58), அருண்பிரகாஷ் (31), பாலசுப்பிரமணி (45), முருகன் (48), வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த கருணாகரன் (50), ஈரோடு பகுதியை சேர்ந்த குமார் (56) ஆகிய 13 பேரை போலீசார் சுற்றி வளைத்து, கைது செய்தனர்.
ரூ.1¾ லட்சம் பறிமுதல்
கைதானவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.