12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி மாற்றப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி மாற்றப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழ்நாட்டில் மார்ச் 13-ம் தேதி தொடங்கிய 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த 3-ம் தேதி நிறைவடைந்தன. இதற்கான தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதால் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வேறு தேதிக்கு மாற்ற பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். மே 7-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதால் முதல்-அமைச்சரிடம் ஆலோசித்து புதிய தேதி அறிவிக்கப்படும் என்றும் திட்டமிட்டபடி மே 5-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படலாம் என்பதை கருத்தில் கொண்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.