ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 1,252 பேர் எழுதினர்

ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 1,252 பேர் எழுதினர்.

Update: 2023-09-10 20:52 GMT

ஊக்கத்தொகை

தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் சார்பில் யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வை எழுதுபவர்களுக்கான ஊக்கத்தொகை திட்ட தேர்வு நேற்று திருச்சியில் 5 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 1,951 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்வு எழுத வந்தவர்களை தேர்வு அறைக்குள் நேற்று காலை 9 மணி வரை மைய கண்காணிப்பாளர்கள் அனுமதித்தனர். அதற்கு மேல் வந்தவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஹால் டிக்கெட், ஏதாவது ஒரு அடையாள அட்டை வைத்திருந்த தேர்வர்களை மட்டுமே தேர்வு அறைக்குள் அனுமதித்தனர்.

1,252 பேர் தேர்வு எழுதினர்

இதையடுத்து காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 1,252 பேர் எழுதினர். 699 பேர் தேர்வு எழுத வரவில்லை. அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெற்றதை வீடியோ பதிவு செய்யப்பட்டது. ேமலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீசஸ் ேதர்வுக்கு பயின்று வரும் ஆயிரம் மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்