1,250 டன் ரேஷன் அரிசி வந்தது
சென்னையில் இருந்து குமரிக்கு 1,250 டன் ரேஷன் அரிசி வந்தது;
சென்னை கொறுக்குப்பேட்டையில் இருந்து குமரி மாவட்டத்துக்கு 1,250 டன் ரேஷன் அரிசி (பச்சரிசி) அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அரிசி சரக்கு ரெயில் வேகன்கள் மூலமாக கொண்டு வரப்பட்டன. மொத்தம் 17 வேகன்களில் வந்த அரிசி மூடைகள் நேற்று நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தை வந்தடைந்தன. பின்னர் அவை ரெயிலில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு, உணவு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டன.