கோவையில் 125 பேருக்கு கொரோனா
கோவையில் நேற்று புதிதாக 125 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.;
கோவை
கோவையில் நேற்று புதிதாக 125 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 32 ஆயிரத்து 123 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 97 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 3 லட்சத்து 28 ஆயிரத்து 598 பேர் குணமடைந்து உள்ளனர். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 914 ஆக உயர்ந்து உள்ளது.