விருத்தாசலத்துக்கு 125 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை

கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து விருத்தாசலத்துக்கு 125 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

Update: 2022-09-05 16:33 GMT

கடலூர்:

கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து விருத்தாசலம் ரெயில் நிலையம் வரை 58 கி.மீ. தூரம் மின் பாதையாக மாற்றப்பட்டு தற்போது ரெயில்கள் 80 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் தண்ட வாளம் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடைந்தது. இதையடுத்து இந்த வழித்தடத்தில் 125 கி.மீ. வேகத்துக்கு ரெயில்களை இயக்கி சோதனை மேற்கொள்ள ரெயில்வே துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதிக வேகத்துக்கு ரெயிலை இயக்கினால், தண்டவாளத்தின் தன்மை எவ்வாறு இருக்கும் என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய ஏற்பாடு செய்தனர். அதன்படி இன்று விழுப்புரத்தில் இருந்து என்ஜின் மற்றும் 3 பெட்டிகள் இணைக்கப்பட்ட ரெயில் கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்துக்கு இன்று மதியம் 11.50 மணிக்கு வரவழைக்கப்பட்டது.

வெற்றி

பின்னர் அந்த ரெயில் மதியம் 12.05 மணிக்கு கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. 125 கி. மீ. வேகத்தில் இயக்கப்பட்ட அந்த ரெயில் விருத்தாசலம் ரெயில் நிலையத்தை 12.40 மணிக்கு சென்ற டைந்தது. அதாவது 35 நிமிடத்தில் விருத்தாசலம் சென்றடைந்தது. அப்போது தண்டவாளம் எவ்வித பாதிப்பும் இன்றி சீராக இருந்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்