திறன் பயிற்சி பெற 1,200 இளைஞர்கள் தேர்வு

தெள்ளாரில் திறன் பயிற்சி பெற 1,200 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2022-09-23 17:04 GMT

வந்தவாசி

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் இளைஞர் திறன் பயிற்சி திருவிழா நடந்தது.

மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் திட்ட இயக்குனர் பா.அ.சையத்சுலைமான் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் சந்திரகுமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி. கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசினார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாடு திட்ட இணை இயக்குனர் பா.ஜெயசுதா, தெள்ளார் ஒன்றியக்குழு தலைவர் கமலாட்சி இளங்கோவன், தெள்ளார் ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்த் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி பெற 1,200 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

நிகழ்ச்சியில் தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர் ந.ராஜன்பாபு, தி.மு.க. நிர்வாகிகள் ப.இளங்கோவன், டி.டி.ராதா, சுந்தரேசன், காங்கிரஸ் மாநில பொது குழு உறுப்பினர் அப்துல்கலீம், வந்தை பிரேம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முடிவில் வட்டார மேலாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்