1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்

வேலூர் மாவட்டத்தில் நாளை 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்கு 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் என வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார்.

Update: 2022-11-26 16:48 GMT

காட்பாடி

வேலூர் மாவட்டத்தில் நாளை 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்கு 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் என வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2-ம் நிலை காவலர்கள், சிறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்களுக்கான எழுத்துத்தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) வேலூர் மாவட்டத்தில் 15 தேர்வு மையங்களில் நடக்கிறது. இதில் 14,991 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் இன்று நடந்தது. வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், காவலர் எழுத்து தேர்வு குறித்தும், காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன பணிகள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்.

மேலும் தேர்வறைக்குள் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வர தேர்வர்களுக்கு அனுமதி கிடையாது. பேனா மற்றும் ஹால்டிக்கெட் மட்டுமே கொண்டுவரவேண்டும்.

கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த தேர்வு வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படும்..

1200 போலீசார் பாதுகாப்பு பணியில்

இந்த எழுத்து தேர்வு போலீஸ் ஐ.ஜி.காமினி மேற்பார்வையில் நடக்கிறது. இந்த தேர்வுக்காக வேலூர் மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்றார்.

கூட்டத்தில் தேர்வு குழு துணை உறுப்பினர்கள் பாஸ்கரன், கனகேசன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் குணசேகரன், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்