காரில் கடத்திய 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தக்கலை அருகே காரில் கடத்திய 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Update: 2022-10-01 21:16 GMT

தக்கலை, 

தக்கலை அருகே உள்ள ஈத்தவிளையில் ரேஷன் அரிசியை காரில் கடத்துவதாக வந்த தகவலையடுத்து கொற்றிக்கோடு சப்-இன்ஸ்பெக்டர் ரசல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அப்போது சம்பந்தப்பட்ட காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

அந்த சமயத்தில் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். ஆனால் அவருடன் வந்த

கோழிப்போர்விளை பகுதியை சேர்ந்த ஆனந்த் (37) என்பவர் பிடிபட்டார். பின்னர் காரை சோதனையிட்டதில் 1,200 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அரிசி, கார், பிடிபட்ட நபரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்