மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான 1,200 ஏக்கர் நிலங்களை மீட்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான 1,200 ஏக்கர் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்ட நிலையில், அந்த நிலங்களை மீட்க அறநிலையத் துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-12-13 20:37 GMT

மதுரை,

மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 1,200 ஏக்கர் நிலங்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளன. இந்த நிலங்கள் தனிநபர்களுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. ஆதீன மடத்தின் நிலத்தை தனி நபர்களுக்கு இத்தனை ஆண்டுகள் குத்தகை விடுவதற்கு எந்த சட்டமும் அனுமதிக்கவில்லை.

ஆனால் விதிகளுக்கு புறம்பாக நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. எனவே இந்த மோசடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த பலனும் இல்லை.

மீட்க வேண்டும்

எனவே 1200 ஏக்கர் நிலங்களை குத்தகைக்கு விட்டதை ரத்து செய்து, நிலங்களை மீட்டு ஆதீனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது விதிகளை மீறி இந்த நிலங்கள் குத்தகைக்கு விடுவதை தடுக்காதது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

அறநிலையத்துறைக்கு உத்தரவு

இந்த நிலையில் இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் விசாரித்தனர்.

ஆதீனம் தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், ஏற்கனவே 292-வது ஆதீனம் பதவியில் இருந்த சமயத்தில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டவிரோதமாக பதிவு செய்தவர்கள் வெளியேற மறுக்கின்றனர். அவர்களை வெளியேற்ற இந்த கோர்ட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று அளித்த தீர்ப்பில், மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 1,200 ஏக்கர் நிலத்தை மீட்க உரிய நடவடிக்கையை அறநிலையத்துறை எடுக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்