இரட்டை ரெயில் பாதை பணிகள் முடிந்ததால் மதுரை-திருமங்கலம் இடையே 120 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி அதிவேக சோதனை
இரட்டை ரெயில் பாதை பணிகள் முடிவடைந்ததால் மதுரையில் இருந்து திருமங்கலம் வரை நேற்று 120 கி.மீ. வேகத்தில் அதிவேகமாக இயக்கி ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
திருமங்கலம்.
இரட்டைரெயில் பாதை பணிகள் முடிவடைந்ததால் மதுரையில் இருந்து திருமங்கலம் வரை நேற்று 120 கி.மீ. வேகத்தில் அதிவேகமாக இயக்கி ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
சோதனை ஓட்டம்
மதுரை-திருமங்கலம் இடையே 17.32 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய இரட்டைரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இரட்டைரெயில் பாதையில் தென்மண்டல ெரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார்ராய் நேற்று ஆய்வு மேற்கொண்டார். முதற்கட்டமாக மதுரை-திருமங்கலம் இடையே காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மோட்டார் டிராலி மூலம் ஆய்வு நடைபெற்றது.
இதைதொடர்ந்து பிற்பகல் 2.40 மணி அளவில் திருமங்கலத்தில் இருந்து மதுரைக்கு நவீன கருவிகள் பொருத்தப்பட்ட சிறப்பு ரெயில் மூலம் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்றது. 4 பெட்டிகள் கொண்ட இந்த ெரயில் 120 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
மின்மயமாக்கல் பணி
அப்போது, தண்டவாளத்தின் உறுதி தன்மையும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்றபோது, ெரயில் பாதை அருகே வசிப்போர் அந்த பாதையை நெருங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என ெரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த புதிய இரட்டை பாதையில் செய்யப்பட்டுள்ள மின்மயமாக்கல் பணிகளை தெற்கு ெரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் ஏ.கே.சித்தார்த்தா இன்று(செவ்வாய்க்கிழமை) ஆய்வு செய்ய இருக்கிறார்.
நிர்ணயித்ததைவிட அதிவேகத்தில் இயக்கி சாதனை
மதுரை-திருச்சி ரெயில் பாதையில் ரெயில்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 110 கி.மீ. ஆகும். மதுரை-தூத்துக்குடி, நெல்லை ரெயில் பாதையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கி.மீ. ஆகும். மதுரை கோட்டத்தில் இந்த இரு மார்க்கங்களிலும்தான் அதிகபட்ச வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், நேற்று சோதனை ஓட்டத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது.
இதற்காக நேற்று அதிவேக சோதனை ரெயில் மதுரையில் இருந்து புறப்பட்டு 7 கி.மீ. தூரம் கொண்ட திருப்பரங்குன்றம் ரெயில் நிலையத்தை மணிக்கு 123 கி.மீ. வேகத்தில் சில நிமிடங்களில் கடந்தது. திருமங்கலத்தில் இருந்து மதியம் 2.42 மணிக்கு புறப்பட்ட இந்த சோதனை ரெயில் 11 கி.மீ. தூரம் கொண்ட திருப்பரங்குன்றத்தை மணிக்கு 123 கி.மீ. வேகத்தில் சென்று மதியம் 2.53 மணிக்கு சென்றடைந்தது. திருமங்கலம்-திருப்பரங்குன்றம் சோதனை ரெயிலை திருமங்கலத்தை சேர்ந்த என்ஜின் டிரைவர் அக்பர் அலி மற்றும் உதவி என்ஜின் டிரைவர் ஹரி கிருஷ்ணன் இயக்கினர். சோதனை ஓட்டத்தின் போது, தென்னக ரெயில்வே முதன்மை நிர்வாக அலுவலர் (கட்டுமானம்) குப்தா, ஆர்.வி.என்.எல். திட்ட மேலாளர் கமலாகரரெட்டி, மதுரை கோட்ட மேலாளர் அனந்த், ஆர்.வி.என்.எல். பொதுமேலாளர்கள் சங்கர், யாதவ் உள்ளிட்டோர் பாதுகாப்பு கமிஷனருடன் சென்றனர்.