தமிழகத்தின் 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவு

அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 105.80, ஈரோட்டில் 105.44 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

Update: 2023-04-21 16:31 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைப்பதால், மக்கள் வீட்டை விட்டு வெளியேற தயங்குகின்றனர்.

மேலும், வெப்பத்தை தணிக்க மக்கள் இளநீர், தர்பூசணி மற்றும் குளிர்பான கடைகளில் அதிக அளவில் குவிகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் இன்று 12 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.

இதில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 105.80, ஈரோட்டில் 105.44 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. மேலும், மதுரை, நாமக்கள், தஞ்சை, திருச்சி, வேலூர், நாகை, நெல்லை, சேலம், திருத்தணி, மற்றும் சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்