வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 12 பேர் காயம்

திருவோணம் அருகே, திருமணத்திற்கு சென்றவர்களின் வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 12 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-09-12 20:40 GMT

தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள பணிகொண்டான்விடுதி கிராமத்தை சேர்ந்த 15 பேர் நேற்று காலை ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவோணத்திற்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். அந்த வேன் பணிகொண்டான்விடுதி குளக்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர குளக்கரையின் பள்ளத்தில் கவிழ்ந்தது. வேனில் இருந்தவர்கள் கூச்சல் போட்டனர்.

12 பேர் காயம்

வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 12 பேர் காயம் அடைந்தனர். இதில் காயம் அடைந்த பூங்கொடி(வயது 45), சண்முகப்பிரியா(24), சிந்து(50), பத்மினி(30) உள்பட 12 பேரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்