மது விற்ற 12 பேர் கைது

மது விற்ற 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-28 18:30 GMT

கரூர் மதுவிலக்கு போலீசார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மது விற்றதாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், திண்டுக்கல்லை சேர்ந்த சந்திரன், வெள்ளியணையை சேர்ந்த முருகன், உப்பிடமங்கலத்தை சேர்ந்த பிச்சைமுத்து, சங்கரன்கோவிலை சேர்ந்த செல்வகுமார், முனியப்பனூரை சேர்ந்த பழனியம்மாள், வெள்ளையன் குளத்தை சேர்ந்த சேர்மத்துரை ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிழக்கு தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (31), புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியை சேர்ந்த மணிமுத்து (27), ராமநாதபுரம் மாவட்டம் மேலையூர் பகுதியை சேர்ந்த அங்குசாமி (34), புகழூர் ஆர்.எஸ். ரோடு பகுதியை சேர்ந்த குழந்தைமணி (55) ஆகியோர் பல்வேறு இடங்களில் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் தோகைமலை அருகே உள்ள வடசேரியை சேர்ந்த பாலு (70) என்பவர் ஒரு ஓட்டல் பின்புறம் மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை தோகைமலை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்