சேலம் மாநகரில் கஞ்சா விற்ற பெண் உள்பட 12 பேர் கைது

சேலம் மாநகரில் கஞ்சா விற்ற பெண் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-15 20:05 GMT

சேலம்,

தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கவும், அதை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் டி.ஜி.பி. சைலேந்திர பாபு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி அந்தந்த மாவட்டங்களில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சேலம் மாநகரில் கஞ்சா விற்பனை செய்த அரிசிபாளையம் மணிவண்ணன், மெய்யனூர் மாதம்மாள் (49), பூபதி (36), திருமலைகிரியை சேர்ந்த பாஸ்கர் என்ற பிரபாகரன் (26), அம்மாபேட்டை சித்தையன், குகை லோகேஸ்வரன், பஞ்சதாங்கி ஏரி காதர் உசேன், அன்னதானப்பட்டி மணி, அழகாபுரம் ரெட்டியூர் பகுதியை சேர்ந்த கணபதி (வயது 24), பெரியபுதூர் மணிகண்டன் (34) உள்பட 12 பேரை நேற்று ஒரேநாளில் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்