12 ஆட்டுக்குட்டிகள் திடீர் சாவு

உசிலம்பட்டி அருகே 12 ஆட்டுக்குட்டிகள் திடீரென இறந்தன.

Update: 2022-10-14 21:51 GMT

உசிலம்பட்டி 

உசிலம்பட்டி அருகே 12 ஆட்டுக்குட்டிகள் திடீரென இறந்தன.

ஆடுகள் வளர்ப்பு

உசிலம்பட்டி அருகே சீமானுத்து கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்(வயது 35). இவர் 300-க்கும் அதிகமான ஆடுகளை வளர்த்து வருகிறார். ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று கிடை அமர்த்தி ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து செல்வது வழக்கம். அப்போது கொடாப்பில்(பனை ஓலைகளால் செய்யப்பட்ட கூண்டு) ஆட்டுக்குட்டிகளை அடைத்து விட்டு ஆடுகளை மட்டும் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதுண்டு.

அந்த வகையில் நேற்று கீரிபட்டி கண்மாய் அருகே உள்ள மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த செல்லம் என்பவரது தோட்டத்தில் கிடை அமர்த்தி இருந்தார்.

12 ஆட்டுக்குட்டிகள் சாவு

அப்போது ஆட்டுக்கொடாப்பில் ஆட்டுக்குட்டிகளை மூடி வைத்துவிட்டு ஆடுகளுடன் மேய்ச்சலுக்காக சென்றார். பின்னர் மீண்டும் வந்து திருப்பி வந்து பார்த்த போது கொடாப்பில் இருந்த 12 ஆட்டுக் குட்டிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு முருகேசன் அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் ஆடுகள் மர்மமான முறையில் இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள

Tags:    

மேலும் செய்திகள்