முத்துமாரியம்மன் கோவில் உண்டியல் மூலம் ரூ.12½ லட்சம் வருவாய்
முத்துமாரியம்மன் கோவில் உண்டியல் மூலம் ரூ.12½ லட்சம் வருவாய் கிடைத்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியல் கடந்த மாசி திருவிழாவுக்கு முன்னதாக திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.12 லட்சத்து 59 ஆயிரத்து 562 ரொக்கம், தங்கம் 66 கிராம், வெள்ளி 849 கிராம் இருந்தது. உண்டியலை திறந்து எண்ணும் பணியில் தன்னார்வலர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.