சென்னை மெட்ரோ ரெயிலில் 7 ஆண்டுகளில் 12 கோடி பேர் பயணம்
சென்னை மெட்ரோ ரெயிலில் 7 ஆண்டுகளில் 12 கோடி பேர் பயணித்து உள்ளனர்.;
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அதன் மெட்ரோ ரெயில் சேவைகளை கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது. அதன்படி கடந்த 7 ஆண்டுகளில் 12 கோடியே 28 லட்சத்து 24 ஆயிரத்து 577 பயணிகள் பயணித்து உள்ளனர். அதிகபட்சமாக கடந்த ஜூன் 3-ந்தேதியில் 2 லட்சம் பேருக்கு மேல் பயணம் செய்தனர். மேலும் 20 சதவீதம் கட்டண தள்ளுபடி 'க்யு ஆர்' குறியீடு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.