தூக்குப்போட்டு 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை
தூக்குப்போட்டு 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.;
தொட்டியத்தை அடுத்த திருஈங்கோய்மலை, காட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் இவரது மகள் தவமணி (வயது 16). இவர் முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் வயிற்று வலியால் அவதி அடைந்து வந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.