ஆசிரியை திட்டியதால் மனமுடைந்த 11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

தென்காசியில், ஆசிரியை திட்டியதால் மனமுடைந்த 11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-19 17:26 GMT

தென்காசி,

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே டி.என். புதுக்குடியை சேர்ந்த முனீஸ்வரி, அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கூடத்தில் கழிவறைக்குச் சென்றுவிட்டு வகுப்புக்கு வந்த முனீஸ்வரியை ஆசிரியை நீலாம்பிகை, தண்ணீர் பாட்டிலை கொண்டு எறிந்ததுடன், முட்டி போட்டு நிற்க வைத்து அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் ரவுடி பொண்ணு என்று கூறி, டி.சி. கொடுத்து பள்ளியை விட்டு அனுப்பிவிடுவதாக மிரட்டியதாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த முனீஸ்வரி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபடுவதை தடுக்க புளியங்குடியில் போலீசார் குவிக்கப்பட்டதுடன், மேல்நிலைப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்