1,157 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் பாக்கெட்டுகள்

ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,157 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் பாக்கெட்டுகளை கலெக்டர் வழங்கினார்.

Update: 2023-06-27 13:08 GMT

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின்கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தில் 6 மாதம் முதல் 2 வயது வரையிலான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மாதம் 2 செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் பாக்கெட்டுகள், 2 வயது முதல் 6 வயது வரையிலான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மாதம் ஒரு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் பாக்கெட்டுகள் வழங்கும் திட்டத்தை கடந்த 13-ந் தேதி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் 6 மாதம் முதல் 6 வயது வரையிலான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 1,157 குழந்தைகள் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் பாக்கெட் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, உதவிகலெக்டர் (பயிற்சி) பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி 1,157 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் பாக்கெட் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து குழந்தைகளுக்கு பிஸ்கெட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) சுஜாதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்