பாதுகாப்பு பணியில் 1,100 போலீசார்

தென்காசி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 1,100 போலீசார் ஈடுபட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தெரிவித்தார்

Update: 2022-10-23 18:45 GMT

தென்காசி மாவட்டத்தில் 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

இன்று (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு என கடந்த 3 நாட்களாக மாவட்ட முழுவதும் சிறப்பான போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி தினத்தன்றும் இந்த பாதுகாப்பு பணி நீடிக்கும். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீசார் சிறந்த முறையில் தங்களது பாதுகாப்பு பணியை செய்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் 1,100 போலீசார் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கோவையில் ஒரு காரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாகவும், ஏற்கனவே பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதே போன்று பஸ் நிலையம், ெரயில் நிலையம் போன்ற இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்