மதுரையில் பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் 11½ பவுன் நகை பறிப்பு
மதுரையில் பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் 11½ பவுன் நகையை பறித்தனர்
மதுரை நாராயணபுரம் பேங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மனைவி சுகுணா(வயது 46). இவர் மதுரை மாநகர வரதட்சணை தடுப்பு பிரிவில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, பணி முடித்து விட்டு, சுகுணா இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். கிருஷ்ணாபுரம் காலனி சந்திப்பு அருகே அவர் வந்தபோது, அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், அவரை வழிமறித்தனர்.
பின்னர், சுகுணா அணிந்திருந்த 11½ பவுன் நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து, தல்லாகுளம் போலீசில் சுகுணா புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.