பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது

விழுப்புரம் தங்கும் விடுதியில் பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-04 15:00 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு தங்கும் விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் தலைமையிலான போலீசார் அந்த தங்கும் விடுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த விஜய்குமார் (வயது 24), விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதையை சேர்ந்த வினோத் (30), பிரகாஷ் (23), மகேஷ் (25), மந்தக்கரை விஜயன் (36), விராட்டிக்குப்பம் சாலை செல்வம் நகரை சேர்ந்த சுகுமார் (27), விழுப்புரம் அருகே கொட்டப்பாக்கத்துவெளி கிராமத்தை சேர்ந்த முருகன் (34), விழுப்புரம் சித்தலன் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (33), கண்டமங்கலம் அசோக் நகரை சேர்ந்த ராஜ்குமார் (35), பிரகாஷ் (35), விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்த சந்திரன் (35) ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த ரூ.65 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்