மாநில நல்லாசிரியர் விருதுக்கு 11 பேர் தேர்வு

மாநில நல்லாசிரியர் விருதுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 11 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-09-03 18:44 GMT

ராமநாதபுரம், 

மாநில நல்லாசிரியர் விருதுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 11 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நல்லாசிரியர் விருது

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந்தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளையொட்டி தேசிய அளவிலும், மாநில அளவிலும் சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி தமிழக அரசின் இந்த ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 11 ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

11 பேர் தேர்வு

இதன்படி தொடக்க கல்வித்துறையில் ராமநாதபுரம் மாவட்டம் வீரமாச்சான்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாச கணேசபிரபு, பிடாரிசேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை தனபாக்கிய பூரண ஆரோக்கியமேரி, வெண்ணீர் வாய்க்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோன்ஸ் சகாயம், ஆதம்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி ஆசிரியை சீதாலட்சுமி, நரிப்பையூர் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி ஆசிரியர் டெக்சரின் ஜெபா டேரின்ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் மணிமொழி, உலையூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அம்பேத்கர், திருப்பாலைக்குடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை தமிழரசி, வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் விஜயகுமார், பிடாரி சேரி அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியை இளமுருகு பொற்செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதே போல புலியூர் லிரியோட்டின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை சித்ரா ஆகியோர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 11 ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகளும் ஆசிரியர்களும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்