பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் உள்பட 11 பேர் நிரந்தர தகுதியிழப்பு

சட்ட விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்டதால் காவேரிப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர், துணைத் தலைவர் மற்றும் 9 நிர்வாக குழு உறுப்பினர்களை நிரந்தர தகுதி நீக்கம் செய்து கூடுதல் பால் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-08-19 17:11 GMT

ஜோலார்பேட்டை

சட்ட விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்டதால் காவேரிப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர், துணைத் தலைவர் மற்றும் 9 நிர்வாக குழு உறுப்பினர்களை நிரந்தர தகுதி நீக்கம் செய்து கூடுதல் பால் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த காவேரிபட்டு கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. வேலூர் சரக துணைப் பதிவாளர் (பால்வளம்) கட்டுப்பாட்டில் சங்கம் செயல்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் தலைவராக கோபு, துணைத் தலைவர் கார்த்தி, மன்னன், கணபத கணபதி, காயத்ரி, ரேணுகா, மீனா, ரங்கசாமி, ஆறுமுகம், வரதராஜி, சின்னப்பிள்ளை ஆகிய 9 பேர் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்நிலையில் சங்க நிர்வாகிகள் சங்கத்திற்கு முரண்பாடாக செயல்படுவதாக எழுந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சங்கத்தில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறாத தினங்களில் சங்க துணை விதிகளுக்கு முரணாக நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு அமர்வு கட்டணம் வசூலித்து சங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. மேலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க எல்லைக்கு அப்பால் வசிக்கும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நபர்களை சேர்த்து பங்குத்தொகை, நுழைவு கட்டணம் வசூலித்தை வலேித்த நிலையிலல் பங்குத்தொகையை மட்டுமே சங்க கணக்கில் வரவு வைத்து நுழைவு கட்டணத்தை வரவு வைக்காமல் சங்கத்திற்கு நிதி அழைப்பு ஏற்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் 12 பால் கேன்கள் மற்றும் 14 பால் கேன்களுக்கான மூடிகளை ஆய்வின்போது ஒப்படைக்காததால் அதற்குண்டான தொகை சங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

துணை பதிவாளர் விசாரணை

இதனையடுத்து சங்கத் துணை விதிக்கு முரணாக சங்க நிர்வாக குழு செயல்பட்டு மேற்படி முறைகேடுகளுக்கு காரணமானதால் சங்கத் தலைவர் உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அது குறித்து வேலூர் துணைப் பதிவாளர் (பால்வளம்) அவர்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 22-ந்் தேதி அறிக்கை சமர்ப்பித்தனர்.

அது குறித்து வேலூர் துணைப்பதிவாளர் அவர்கள் தலைவர் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களிடம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 29-ந்் தேதி விளக்கம் கேட்டு விசாரணை மேற்கொண்டார்.

அப்போது சங்கத் தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் சங்கத்தில் கடமை மற்றும் பொறுப்புகள் சரிவர தெரியாததால் மேற்படி நிதி இழப்பு ஏற்பட தாங்கள் காரணமாகி விட்டதாக ஒப்புக்கொண்டனர்.

நிரந்தர தகுதி நீக்கம்

இதனையடுத்து தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் மற்றும் விதிகளுக்கு புறம்பாக சங்கத்திற்கு நிதியிழப்பு ஏற்படுத்தி கடமை மற்றும் பொறுப்புகளை முறையாக செய்ய தவறியதால் சங்கத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் 9 நிர்வாக குழு உறுப்பினர்கள் என அனைவரையும் நிரந்தர தகுதி நீக்கம் செய்து பால் ஆணையர் (கூடுதல் பொறுப்பு) ஜெ.ராஜராஜன் உத்தரவிட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்