தச்சநல்லூர்:
நெல்லை தச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கமுத்து மற்றும் போலீசார் சிவசக்தி தியேட்டர் ரோட்டில் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடிய இசக்கி (வயது 55), பால்ராஜ் (41), ராஜேந்திரன், செய்யது ரபி (34), சின்னத்துரை (35), அல்லா பிச்சை (51), கண்ணன் (39), சிவனைத பெருமாள் (39), காமராஜ் (60), செந்தில்வேல் (40) மற்றும் முருகன் (47) ஆகிய 11 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 52 சீட்டுகள் மற்றும் ரூ.49,900 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.