ஆதித்தமிழர் கட்சியினர் 11 பேர் கைது
ரெயில் மறியலுக்கு முயன்ற ஆதித்தமிழர் கட்சியினர் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.;
ஆதித்தமிழர் கட்சியினர் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கைவிடக்கோரி தேனியில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அழகர் தலைமையில் சிலர் நேற்று தேனியில், பெரியகுளம் சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகில் வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார், இந்த போராட்டத்துக்கு அனுமதி பெறவில்லை என்று கூறி தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டு ரெயில் மறியல் செய்ய முயன்றனர். இதையடுத்து ரெயில் மறியல் செய்ய முயன்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.