ரூ.11 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை

ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனை அருகே ரூ.11 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை அமைப்பது என பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-01-31 19:00 GMT

ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் பேரூராட்சி கூட்டம் நடந்தது. இதற்கு பேரூராட்சி தலைவர் பொன்.சந்திரகலா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் விஜயா, துணைத் தலைவர் ஜோதி, மற்றும் சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் உள்ள 18 வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனை அருகே தேனி - மதுரை சாலையில் உள்ள பஸ்நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.11 லட்சம் செலவில் நிழற்குடை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் பேரூராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்