சேலம் வழியாக சென்ற ரெயில்களில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம் வழியாக சென்ற ரெயில்களில் 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.;
சூரமங்கலம்:
ஆந்திர மாநிலத்தில் இருந்து ரெயில்களில் கஞ்சா கடத்தி வரப்பட்டு தமிழகம், கேரள மாநிலங்களில் விற்பனை செய்யப்படுவதாக ரெயில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ரெயில்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ெரயிலில் பாதுகாப்பு படையினர் நேற்று அதிகாலை சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 7 கிலோ கஞ்சாவை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். இதேபோல் செகந்திராபாத்- திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ் ெரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையில் 4 கிலோ கஞ்சாைவ போலீசார் பறிமுதல் செய்தனர்.