ஆந்திராவில் இருந்து ரெயிலில் கடத்திய 11 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது

ஆந்திராவில் இருந்து ரெயிலில் 11 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.;

Update:2023-03-07 15:00 IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் நேற்று ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் திடீரென பயணிகளிடம் சோதனை செய்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த ரெயிலில் இருந்து இறங்கிய பயணி ஒருவரின் பையை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்தனர். அந்த பையில் 5 பாக்கெட்டுகளில் மொத்தம் 11 கிலோ எடை கொண்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெபதாஸ் தலைமையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திராவில் இருந்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த நாமக்கல் மாவட்டம் கள்ளிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி (வயது 47) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்