ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 11 பேர் காயம்
சங்கராபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 11 பேர் காயம் அடைந்தனர்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே கள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த திருமலையம்மாள் மற்றும் அதே ஊரை சேர்ந்த சிலர் ஒரு ஆட்டோவில் கள்ளிப்பட்டியில் இருந்து கொசப்பாடி கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை புதுப்பாலப்பட்டை சேர்ந்த ஜெயராமன் என்பவர் ஓட்டினார். குன்றுமேடு வளைவு அருகே சென்றபோது ஆட்டோ எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் திருமலையம்மாள் உள்பட 11 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் விபத்து தொடர்பாக ஆட்டோ டிரைவர் ஜெயராமன் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.