11 ஆடுகள் விஷம் வைத்து சாகடிப்பு
தட்டார்மடம் அருகே 11 ஆடுகள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டது.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே உள்ள நடுவக்குறிச்சியைச் சேர்ந்த பால்பாண்டி மகன் பாலன் என்பவர், தட்டார்மடத்தில் உள்ள செல்லத்துரை என்பவரது தோட்டத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
இவரது தோட்டத்தில் நேற்று முன்தினம் தட்டார்மடத்தைச் சேர்ந்த சீமோன் மனைவி லிதியாள் (வயது 46) வளர்த்து வரும் 8 ஆடுகளும், முத்தம்மாள்புரத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்பவருக்கு சொந்தமான 2 ஆடுகளும், சுனிதா என்பவருக்கு சொந்தமான ஒரு ஆடும் மேய்ந்து கொண்டிருந்தது.
மாலையில் ஆடுகளை தேடி சென்றபோது அங்கு 11 ஆடுகளும் விஷம் அருந்திய நிலையில் உயிரிழந்து காணப்பட்டது.
இதுகுறித்து லிதியாள், தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முகமது ரபீக் விசாரணை நடத்தி பாலன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்.