மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் செத்தன

தா.பேட்டைஅ ருகே மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் செத்தன

Update: 2022-07-25 20:13 GMT

தா.பேட்டை, ஜூலை.26-

தா.பேட்டை அருகே தேவானூர்புதூர் கிராமத்திலிருந்து ஜம்புமடை செல்லும் சாலையில் உள்ள தோட்டத்தில் வசித்து வருபவர் இளங்கோவன். இவர் 30- க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே சிறிய மலை குன்று அமைந்துள்ளது. தனது வீட்டின் அருகிலேயே ஆடுகளை பட்டி அமைத்து பராமரித்தும் வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுவிட்டு பின்னர் மீண்டும் மாலை பட்டிக்குள் ஆடுகளை அடைத்து வைத்து இருந்தார். இந்தநிலையில் நள்ளிரவில் இவரது பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்கு சுமார் 10 ஆடுகளை கடித்து குதறியது. இதில் 7 சினை ஆடுகள் குடல் சரிந்து செத்தன. இதேபோல் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் பட்டிக்குள் புகுந்த மர்மவிலங்கு ஆடுகளை கடித்துக் குதறியதில் 3ஆடுகளும், பிரபாகரன் என்பவரின் பட்டிக்குள் மர்ம விலங்கு புகுந்து கடித்ததில் ஒரு ஆடும் செத்தன. இதில் இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். 

Tags:    

மேலும் செய்திகள்