பண்ருட்டி அரசு என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் சாப்பிட்ட 11 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்

பண்ருட்டி அரசு என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் சாப்பிட்ட 11 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.;

Update:2023-10-18 01:16 IST

பண்ருட்டி, 

பண்ருட்டி பணிக்கன்குப்பத்தில் அரசு அண்ணா பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு ஊர்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு மாணவிகள் விடுதியில் உணவு சாப்பிட்டனர்.

இதில் மாணவிகள் காவ்யா(வயது 19), மெர்சி(19), எழிலரசி(19), ஸ்ரீநிதி(19), வர்ஷினி(20), ரேகா(18), பிரவன்யா(17), ஜீவிதா(18), மதுமதி(17), பிரசன்னதேவி(20), குர்தா(21) ஆகியோருக்கு நேற்று காலையில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதையடுத்து 11 மாணவிகளும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவிகள் சாப்பிட்ட உணவில்தான் பிரச்சினை இருப்பதாக கூறினர்.

இதுபற்றி அறிந்ததும் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கைலாஷ்குமார் தலைமையில் உணவுபாதுகாப்பு அலுவலர்கள் நல்லதம்பி, சுந்தரமூர்த்தி, சுப்ரமணியன் ஆகியோர் கொண்ட குழுவினர் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கல்லூரி விடுதிக்கு சென்ற அதிகாரிகள் சமையல் கூடத்தில் உணவு மற்றும் தண்ணீரை பரிசோதனைக்கு எடுத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்