10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.

Update: 2023-04-04 18:17 GMT

தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று முன்தினம் முடிவடைந்தது. பிளஸ்-1 வகுப்புக்கு இன்றுடன் (புதன்கிழமை) தேர்வு முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்புக்கு நாளை (வியாழக்கிழமை) அரசு பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வினை 186 பள்ளிகளை சேர்ந்த 5,231 மாணவர்களும், 4,854 மாணவிகளும் என மொத்தம் 10,085 பேர் 58 மையங்களில் எழுதவுள்ளனர்.பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு குலுக்கல் முறையில் பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அனைத்து தேர்வு மையங்களிலும் போதிய அடிப்படை வசதிகள், மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்று வர போதிய பஸ் வசதிகள், வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல போதிய போலீஸ் பாதுகாப்பு என அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்புக்கு வருகிற 10-ந்தேதி ஆங்கில தேர்வும், 13-ந்தேதி கணித தேர்வும், 17-ந்தேதி அறிவியல் தேர்வும், 20-ந்தேதி சமூக அறிவியல் தேர்வும் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்