வட்டார கல்வி அலுவலர் தேர்வை 1098 பேர் எழுதினர்

கோவையில் நேற்று 4 மையங்களில் நடைபெற்ற வட்டார கல்வி அலுவலர் தேர்வை 1098 பேர் எழுதினர்.

Update: 2023-09-10 19:15 GMT
கோவை


கோவையில் நேற்று 4 மையங்களில் நடைபெற்ற வட்டார கல்வி அலுவலர் தேர்வை 1098 பேர் எழுதினர்.


வட்டார கல்வி அலுவலர்


ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கான (பி.இ.ஓ.) அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந் தது. இந்த தேர்விற்கு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத 1,388 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.


தேர்வர்கள் தேர்வு எழுத வசதியாக கோவை மாநகரில் சித்தா புதூர் மாநகராட்சி பள்ளி, கோவை-திருச்சி ரோடு புனித மேரீஸ் பள்ளி உள்பட மொத்தம் 4 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.


இந்த தேர்வு மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள் ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. நேற்று காலை முதல் தேர்வர்கள் தேர்வு மையங்களில் குவிந்தனர். அவர்கள் தங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வறைகள் குறித்து விவரங்களை அங்கி ருந்த அறிவிப்பு பலகையில் பார்த்து தெரிந்து கொண்டனர்.


290 பேர் எழுதவில்லை


தேர்வு மையங்களுக்கு காலை 9.30 மணிக்குள் தேர்வர்கள் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனால் காலதாமதமாக வந்த தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வில்லை. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெற்ற இந்த தேர்வை 1,098 பேர் எழுதினர். 290 பேர் தேர்வு எழுதவரவில்லை. சில பெண்கள் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத வந்தனர். அவர்கள் தங்களது குழந்தைகளை கணவர் அல்லது உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு தேர்வு அறைக்கு சென்றனர்.


தேர்வர்கள் காப்பி அடிப்பதை தடுக்க சிறப்பு படைகள் அமைக் கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. கல்வி துறை அதிகாரிகளும் தேர்வு மையங்களுக்கு சென்று கண்காணித்தனர். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டு இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.


உதவித்தொகை பெற தேர்வு


இதுதவிர நான் முதல்வன் திட்டத்தின் கீழ் யு.பி.எஸ்.சி. தேர்விற்கு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மாதம் ரூ.7,500 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக பயனாளிகளை தேர்வு செய்ய எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் மொத்தம் 9 மையங்களில் இந்த தேர்வு நடந்தது.


இந்த தேர்வு எழுத 3,472 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 1,365 பேர் தேர்வு எழுத வரவில்லை. 2,107 பேர் இந்த தேர்வு எழுதி னர். இதையொட்டி தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


மேலும் செய்திகள்