108 திருவிளக்கு பூஜை

மானாமதுரையில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது;

Update: 2023-09-29 18:45 GMT

மானாமதுரை

மானாமதுரை வைகை கரை அய்யனார் மற்றும் அலங்காரகுளம் சோனையா சாமி கோவிலில் உள்ள கட்டிக்குளம் மாயாண்டி சித்தர், லாட சன்னாசி சுவாமிகள் சன்னதி முன்பாக ஏராளமான பெண்கள் உலக நன்மைக்காகவும், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

முன்னதாக அய்யனார் சோனையா, கட்டிக்குளம் மாயாண்டி சாமி, லாடசன்னாசி மற்றும் கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் பெண்கள் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி காளீஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்